இயக்குநர் ஷங்கரின் வசூல் சாதனையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முறியடித்து நம்பர் ஒன் வசூல் நாயகனாக சாதனை படைத்துள்ளார். பிரமாண்ட படைப்பு மூலம் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். ஹாலிவுட் படங்களுக்கு இணையான திரைக்கதைகளை உருவாக்கி தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு கொண்டு சேர்த்தவர்.

அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கிய ஷங்கர், தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஸ்டார் நடிகர்கள் பலர் காத்திருந்த காலம் அது. நான் ஸ்டாப் ஹிட் கொடுத்து வந்த ஷங்கர், ரஜினியை வைத்து ‘சிவாஜி’ படத்தை இயக்கினார். அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

விமர்சனத்தில் சூப்பர் ஹிட்டான இப்படம் வசூலிலும் சாதனை படைத்து. அதன்படி தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படமாக சிவாஜி உருவானது. அதனை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தை இயக்கினார். அப்படமும் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து விஜய்யுடன் ‘நண்பன்’, விக்ரமுடன் ‘ஐ’, கமலுடன் ‘இந்தியன் 2’ என இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் 100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்தது. ஷங்கர் படம் என்றாலே வசூல் கேரண்டி என்றே சொல்லலாம்.

அதன்முலம் 100 கோடியை கடந்த படங்களின் மொத்த வசூல் 1700 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அந்த வகையில் இயக்குநராக அதிக வசூல் கொடுத்த இயக்குனராக ஷங்கர் முதல் இடத்தில் இருந்து வந்தார். நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த ஷங்கரின் சாதனையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது முறியடித்துள்ளார். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், ‘கைதி’ மூலம் மிகவும் பிரபலமானார். சினிமா ரசிகர்கள் உட்பட ஸ்டார் நடிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.

முன்னணி நடிகர்கள் பலர்லோகேஷுடன் கூட்டணி வைக்க அதிகம் ஆர்வம் காட்டினார். அதன்படி கமலுடன் ‘விக்ரம்’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’, ரஜினியுடன் ‘கூலி’ என குறுகிய காலத்தில் ஸ்டார் நடிகர்களுடன் கூட்டணி அமைத்த பெருமை இவருக்கே சேரும். அதேபோல் இவர் இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் விமர்சனம் ரீதியாகவும், வசூலிலும் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கூலி’ வசூலில் மாஸ் காட்டி வருகிறது. வெறும் நான்கே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளத்தக்க படக்குழு தெரிவித்த நிலையில் இனி வரும் வாரங்களில் அதன் வசூல் 600 கோடி தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லோகேஷ் ஹிட் கொடுத்த அணைத்து படங்களின் மொத்த வசூலை சேர்த்தால் 1900 கோடி ரூபாய் ஆகும். கூலியின் மொத்த வசூல் இனி வரும் நாட்களில் தெரியும் என்பதால் 2100 கோடி ரூபாய்க்கும் மேல் லோகேஷ் கனகராஜின் வசூல் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மொத்த வசூலை இயக்குநர் லோகேஷ் குறுகிய காலத்தில் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். முதல் 100 கோடி ரூபாய் வசூல் கொடுத்த ஷங்கரை போல் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை லோகேஷ் விரைவில் படைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *