தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெறுவதையொட்டி, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது. மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும் 60 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பில் தொண்டர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
100 அடி உயர கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாரபத்தியில் இருந்து ஆவியூர் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ச்சியாக தவெக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், தவெக தொண்டர்களும், பொதுமக்களும் மாநாட்டு திடல் பகுதியை ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர்.
